இறைமை ஒன்று உண்டு ஆனால் அதற்க்கு தனி

ஏற்றுக்கொள்கிறேன் .... (85% people answered this) மறுக்கிறேன் .... (14% people answered this) புரிந்துக்கொள்ள முடியவில்லை ... (0% people answered this) 21 people voted. தன்னை அறிவதே தலை சிறந்தது நான் யார் என்பதை அறிந்து அமைதியையும் ஆனந்தத்தையும்…Read More

திருக்குறள்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். - திருக்குறள் -455. நல்ல எண்ணங்கள் கொண்ட மனத்தூய்மையும் சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும் தான் இருக்கும் இனத்தின் தூய்மையால் சிந்தாமல் வரும். இந்நாள் இனிய நாளாக அமைய இறைமை…Read More

திருக்குறள்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. - திருக்குறள் -452. நிலத்தின் இயல்பால் நீரானது தனது தன்மையில் இருந்து திரிந்துவிடும் அதுபோல் மனிதர்களுக்கும் தனது இனத்தின் இயல்பே அறிவு என்று அமைகிறது. இந்நாள் இனிய நாளாக அமைய இறைமை…Read More

திருக்குறள்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. - திருக்குறள் -436. தன்னிடம் உள்ள குறைகளை அழித்துப் பிறரது குறையை காணும் வழிகாட்டுபவருக்கு எந்த குறையும் இருக்காது. இந்நாள் இனிய நாளாக அமைய இறைமை அருள்வதாக..சிவயோகி_/\_.

திருக்குறள்

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். - திருக்குறள் -427. அறிவு உள்ளவர்கள் அடுத்து நடப்பதை அறிவார்கள் அறிவு இல்லாதவர்கள் அதை அறிய கல்லாதவர்கள். இந்நாள் இனிய நாளாக அமைய இறைமை அருள்வதாக..சிவயோகி_/\_.

திருக்குறள்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. - திருக்குறள் -426. உலக இயக்கம் எப்படி என்று அறிந்து அதற்க்கு ஏற்றார்ப் போல் உலகத்துடன் இணக்குவது அறிவு. இந்நாள் இனிய நாளாக அமைய இறைமை அருள்வதாக..சிவயோகி_/\_.

திருக்குறள்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. - திருக்குறள் -422. சென்ற இடத்திற்கு ஏற்ப மாறாமல் தீமைகளைக் களைந்து நன்மைகளை ஏற்பது அறிவு. இந்நாள் இனிய நாளாக அமைய இறைமை அருள்வதாக..சிவயோகி_/\_.
See more
to comment