Progress

263 signed
237 more needed

Sign the Petition to

The Hon'ble Chief Minister of Tamil Nadu

விகடன் குடும்பத்திலிருந்து புதியதாக வெளிவருகிறது “டைம் பாஸ் ” என்னும் இதழ், இதற்கான விளம்பரம் ‘சன்’, மற்றும் ‘புதியதலைமுறை’ டி‌வி களில் வெளிவருகிறது, விளம்பரம் இதுதான் தன்னை காதலிக்கும் பெண்ணிற்காக ஒருவன் பணம் செலவழிக்கிறான்.காதலை பெண் டைம் பாஸ் போல செய்து அவனை ஏமாற்றிவிட்டு செல்கிறாள். இப்போது வாலிபன் பணம் எடுக்க செல்லும் போது ஏடி்‌எம் மிஷின் நாமத்தினை காட்டுகிறதாம்.

ஹிந்துமததில் உள்ளவர்களான வைஷ்ணவர்களின் மதச்சின்னம் திருமண். திருமாலின் பெயர்களை (நாமம்) சொல்லி நெற்றியில் இட்டுக்கொள்வதால் நாமம் எனப்படுகிறது. இதற்கு ஏமாற்றதின் அடையாளம் என பொருள்படும்படி ஒரு பத்திரிகை விளம்பரம் செய்வதை நகைச்சுவையாக எடுதுக்கொள்ள முடியவில்லை. இதை போன்றே மற்ற மதச்சின்னங்களை கிண்டல் செய்து விளம்பரம் வெளியிட முடியுமா? அதன் பின் விளைவுகள் என்னவாகும் என்பது தெரியும்.

கார்ட்டூனிற்கும், வைரமுத்து பாடல் வரிக்கும் பிரச்சனை கிளப்புவது எப்படி சரியோ, அப்படி சரியானது ஸ்ரீவைஷ்ணவர்களின் மதச்சின்னம் கேலிப்பொருள் அல்ல என நாம் உணர்துவதும், பத்ரிகையை கண்டிப்பதும். அறச்சீற்றமும், மான உணர்ச்சியும் நமக்கு இல்லயா? திருமண் ஏமாற்றத்தின் அடையாளம் என இவர்களுக்கு யார் சொன்னது? அப்படி நினைப்பார்கள் எனில் இவர்களது ஆன்மீக பத்ரிகைகளில் திருமண் உள்ள பெருமாள் படங்களினை வெளியிடாமால் இருப்பார்களா ?

கேட்க நாதி இல்லையா ?
இப்படியே சென்றால் திருமண் இட்டுக்கொண்டு வெளியே போகமுடியாது. பஸ்சிலும் ரயிலிலும் கூட போகமுடியாத நிலை வரும் கடைக்காரன் கூட பொருள் தரமாட்டான் சகுனம் சரியில்லை என யாரும் எதிரே வரமாட்டார்கள். இது அதீத கற்பனை அல்ல. சிறு வயதில் இருந்தே இந்த மாதிரி கொடுமைகளை இன்று வரை நான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். நான் மட்டும் அல்ல, என்னைப் போன்ற ஸ்ரீவைஷ்ணவ இளைஞர்கள் பலர் நெற்றியில் இட்டுக்கொண்டு கேலிக்கு பலியாகி இன்று வெறும் நெற்றியுடனும் மனதில் வேதனையுடனும் அலைகின்றார்கள். இஸ்லாமியப் பெண்கள் பர்தா போட்டுக்கொண்டாலோ, கிறிஸ்துவப் பாதிரியார்கள் பாவாடை போன்ற வெள்ளை நிற உடை அணிந்துக்கொண்டாலோ அவர்கள் மதம் அப்படி என்று கொண்டாடும் அதே ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த மக்கள், ஸ்ரீவைஷ்ணவ மாதர் மடிசார் புடவை கட்டினால் மாமி என்று இகழ்வதும், ஆண்கள் அணிந்து செல்லும் நாமம், மற்றும் குடுமி என்று அனைத்தையும் கிண்டல் செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் இதை பிரபாலப்படுத்தியும் மகிழ்கின்றனர். பற்றாக்குறைக்கு பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு "பட்டை நாமம்" என்று எவனாவது எதிலாவது தோற்றுவிட்டால், ஏமாந்து விட்டால் செய்தி பரப்புகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளியாக, மதம் சார்ந்த உளவியல் சம்பந்தப்பட்ட இவ்வழக்கங்களை கேலி கூறுவது தண்டிக்கத் தக்கது என்றும், இவற்றை காவல் துறை கடுமையாக கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் வைக்கும் படியும், இவ்வாறு கேலி செய்து வந்த திரைப்படங்கள் இனித் திரையிடும் பொழுது அக்காட்சிகள் நீக்கப்பெற்றே திரையிடப்படவேண்டும் என்றும், பத்திரிகைகள் இவ்வாறு செய்தி வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் உடனடியாகச் சட்டங்கள் கொண்டு வந்து அமல் படுத்தவேண்டுமாய் தற்பொழுதைய முதலமைச்சரை எங்கள் மூத்த உடன்பிறப்பாய் நினைத்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Signed,

LakshmiNarasimhan Venkatapathy

This petition closed over 5 years ago

How this will help

If you don't sign and join this petition, rest assured Srivaishnavas will become extinct in few decades.

70 comments

to comment